:
70 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி மேல் மாகாண சபை உறுப்பினர் குகவர்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையிலேயே மனோ கணேசனை எதிர்த்துக் இளைஞர் அணியுடன் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில் குகவர்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குகவர்தனின் ஆதரவாளர்கள் இக்கைதின் பின்னணியில் மனோ கணேசனே இருப்பதாகவும் ஆதாரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனினும், மூன்று வீடுகளை வாங்குவதற்காக 70 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் தந்து ஏமாற்றியுள்ளதாக தொழிலதிபர் ஒருவர் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment