பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சரவைக்கு 35 பேரை பரிந்துரைத்ததன் மூலம் அரசியலமைப்பை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக அமைச்சரவையில் 30 பேரே அங்கம் வகிக்க முடியும் என்கின்ற நிலையில் சட்டத்தில் ஓட்டைகளைத் தேடும் ரணில் விக்கிரமசிங்க எந்த அடிப்படையில் இவ்வாறு 35 பேரின் பட்டியலை ஒப்படைத்தார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அநுர மேலும் தெரிவித்துள்ளார்.
18ம் திருத்தச் சட்டத்துக்கு முரணாக நடந்து கொண்டதாகவே மைத்ரியின் நடவடிக்கைகளை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment