தேசிய கொள்கை, பொருளாதார, தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, இளைஞர் விவகாரத்தை கவனிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களே இல்லையா என கேள்வியெழுப்பியுள்ளார். #
இன்றைய தினம் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளதையடுத்து நாமல் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ள அதேவேளை, கடந்த சில தினங்களாக அமைச்சரவையை நியமிப்பதை விடுத்து தமது கட்சி உறுப்புரிமை பற்றிப் பேசி ஐக்கிய தேசிய கட்சியினர் கால விரயம் செய்வதாகவும் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment