மாவனல்லையில் இரு இடங்களில் புத்தர் சிலை உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் இன்று அதிகாலை முஸ்லிம் இளைஞர் ஒருவரை இச்சம்பவத்தில் தொடர்பு படுத்தி பொலிசில் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீதுருவத்த சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையே இவ்வாறு பிரதேச சிங்கள இளைஞர்கள் மடக்கிப் பிடிக்க முயன்றதாகவும் அதில் ஒருவர் தப்பியோடி விட்டதாகவும் பிரதேசத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பிடிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் அவ்வழியே பயணித்துக் கொண்டிருக்கையிலேயே திடீரென இவ்வாறு நடந்ததாகவும் சிலை உடைப்புக்கும் அவருக்கும் சம்பந்தமில்லையெனவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தெல்கஹகொட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரையே இச்சம்பவத்தோடு தொடர்பு படுத்தி பொலிசில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
same like digana incident will expect
Post a Comment