மஹிந்த ராஜபக்ச எந்நேரத்திலும் மீண்டும் பிரதமராக்கப்படக் கூடும் என்பதனாலேயே அவரது நாடாளுமன்ற உரிமையைப் பறிக்க சதி நடந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.
ஐக்கிய தேசியக் கட்சியும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்தே இச்சதியை மேற்கொள்வதாக தெரிவிக்கும் அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் யாரும் அரசுடன் இணைந்து கொள்ளாத நிலையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
கடந்த தடவை, ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானது எனும் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி கைகூடாது போயிருந்ததாகவும் வாசுதேவ சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment