
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைச்சரவைக்கான பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதனடிப்படையில் நாளைய தினம் ஒரு தொகுதி அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இம்முறை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்குள் சுருக்கிக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்குத் தாவிய மூவரின் அமைச்சு பதவிகள் நிராகரிக்கப்படும் என மைத்ரிபால சிறிசேன தெரிவித்ததாக தயாசிறி முன்னர் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment