இடைக்கால பட்ஜட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 88 உறுப்பினர்களே ஆதரவளித்த நிலையில் அக்கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் ஐ.தே.க தலைமையிலான அரசு நீண்ட நாட்கள் நிலைக்காது எனவும் தெரிவிக்கிறார் பந்துல குணவர்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே இடைக்கால பட்ஜட் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் 15 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாதமை குறித்து ஏலவே கட்சி மட்டத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹிந்தவுக்கு 103 பேர் ஆதரவாக உள்ளதாகவும் ஐ.தே.கட்சிக்கு 88 பேரே தற்சமயம் ஆதரவளிப்பதாகவும் பந்துல தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment