களு அக்காவின் சகா டிகீ அக்கா போதைப் பொருளுடன் கைது! - sonakar.com

Post Top Ad

Friday 28 December 2018

களு அக்காவின் சகா டிகீ அக்கா போதைப் பொருளுடன் கைது!


கொழும்பு கிரான்ட்பாஸ், தொட்டலங்க பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் தொட்டலங்க களு அக்காவின் சகா டிகீ அக்கா ஆறு லட்ச ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் குறித்த பெண் (51) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2009 யுத்த நிறைவின் பின், இலங்கை போதைப் பொருள் வர்த்தக மையமாக மாறியுள்ளதாக அண்மையில் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment