
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தாம், தமது தந்தை இணைந்தது பற்றியும் எதிர்க்கட்சி பற்றியும் பேசி காலத்தை விரயப்படுத்தாமல் ஐக்கிய தேசியக் கட்சியினர் அமைச்சரவை உட்பட வேறு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் நாமல் ராஜபக்ச.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெற்றதாக நாமலே விளம்பரப்படுத்தியிருந்ததோடு அதற்கான அடையாள அட்டைகளையும் வெளியிட்டிருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் குறித்த கட்சிக்கு அங்கத்துவம் இல்லாத நிலையில் இக்கட்சி உறுப்பினர்கள் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வீற்றிருப்பது என தற்போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
நாமல் வெளியிட்ட அடையாள அட்டையுடன் ஹர்ஷ டிசில்வா இது தொடர்பில் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து பலரும் நாமலிடம் வினா எழுப்பி வருகின்றனர். இந்நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் பெரமுன - சுக 'உறவு' பற்றிப் பேசி காலத்தை விரயமாக்காமல் அமைச்சரவை சர்ச்சைக்கு முதலில் தீர்வைக் காணும்படி நாமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment