மாவனல்லை பகுதியில் சேதப்படுத்தப்பட்ட புத்தர் சிலைகளை முஸ்லிம்களே திருத்திக் கொடுப்பதன் மூலம் பௌத்த மக்களுடனான நல்லுறவை வளர்த்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கிறார் நா.உ மரிக்கார்.
நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் எனவும் தானும் அதில் பங்கேற்கத் தயார் எனவும் மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முழுமையான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment