மஹிந்த இருக்கும் இடம் தான் 'பெரமுன': நாமல் விஞ்ஞான விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 December 2018

மஹிந்த இருக்கும் இடம் தான் 'பெரமுன': நாமல் விஞ்ஞான விளக்கம்!


மஹிந்த ராஜபக்ச எங்கு இருக்கிறாரோ அங்கு தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளது என விஞ்ஞானபூர்வ விளக்கமளித்துள்ளார் நாமல் ராஜபக்ச.

மஹிந்தவின் கொள்கைகளே பெரமுனவின் கொள்கைகள் எனவும் மஹிந்த எக்கட்சியில் இருந்தாலும் மக்கள் அவருக்கே வாக்களிப்பதாகவும் அதனடிப்படையில் மஹிந்த எங்கிருக்கிறாரோ அதுவே பெரமுன எனவும் நாமல் விளக்கமளித்துள்ளார்.



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக இருக்கின்ற போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெற்றதாக விளம்பரப்படுத்தியதன் பின்னணியில் அவ்வாறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியுமா எனும் கேள்வியெழுப்பப்பட்டு, இது தொடர்பில் நாளைய தினம் சபாநாயகரின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தெரிவான அனைத்து உறுப்பினர்களும் தொடர்ந்தும் அக்கட்சியின் உறுப்பினர்களாகவே இருப்பதாக UPFA தரப்பிலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment