
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் இன்னும் நீக்கப்படாத நிலையில் மஹிந்த ராஜபக்ச எவ்வாறு அப்பதவிக்கு நியமிக்கப்பட முடியும் என கேள்வியெழுப்பியுள்ளார் ஆர். சம்பந்தன்.
நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இயங்குவதற்கு சபாநாயகர் அனுமதியளித்திருந்த போதிலும், அவர் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன எனும் கட்சியில் இணைந்தவர் எனும் அடிப்படையில் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன் மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதை ஆட்சேபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment