கண்டி, யட்டிநுவர - உடுநுவர பகுதிகளிலும் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
யட்டிநுவர, ஸ்ரீ தெடங்கவல நாக தேவாலயத்தில் இருந்த புத்தர் சிலை மற்றும் உடுநுவர. லெயம்கஹவெல சந்தியிலும் இவ்வாறே புத்தர் சிலையொன்றும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பேராதெனிய மற்றும் கண்டி பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாகவும் நெல்லிகல, வக்குரகும்புறே தம்மரத்ன தேரர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இனங்களுக்கிடையிலான முறுகலை உருவாக்க இவ்வசம்பாவிதங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ள அதேவேளை சட்ட - ஒழுங்குக்குப் பொறுப்பான ஜனாதிபதி தாய்லாந்துக்கு விடுமுறையில் சென்றுள்ளமையும் வழக்கமாக இன விரோத சம்பவங்கள் இவ்வாறான கால கட்டங்களிலேயே இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment