ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் மஹிந்த ராஜபக்சவைப் பின்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயில் சேர்ந்து கொண்டதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரமுனயில் இணைந்ததாக விளம்பரப்படுத்தப்பட்ட பலர் தாம் அவ்வாறு இணையவில்லையென மறுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியில் ஐ.ம.சு.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்கவும் தற்போது அதனை மறுத்துள்ளதுடன் தான் விண்ணப்பித்ததாகவும் ஆனாலும் உறுப்புரிமையைப் பெறவில்லையெனவும் விளக்கமளித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் வைத்தே மறுத்திருந்த அதேவேளை தற்போது ஜி.எல் பீரிசைத் தவிர ஏனையோர் அக்கட்சியில் சேரவே இல்லையென தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment