கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ப்ளுமென்டல் சங்கா என அறியப்படும் பாதாள உலக பேர்வழியே இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடாத்தியுள்ளதாகவும் காலை 8 மணியளவில் ஹேனமுல்ல வீட்டுத் தொகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
32 வயது நபர் ஒருவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment