மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்ட தனது நிலைப்பாட்டில் சபாநாயகர் கரு ஜயசூரிய திடமாக உள்ளதாக அறியமுடிகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக நாடாளுமன்றம் சென்ற மஹிந்த ராஜபக்ச, அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமை பெற்றதையடுத்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களாகவே இருப்பதாக அக்கட்சி சபாநாயகருக்கு அறிவித்துள்ள நிலையில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தான் ஆரம்பித்த கட்சியின் உறுப்புரிமை பெற்ற போதிலும் தற்போது அதனை நிராகரிக்கும் நிலைக்கு மஹிந்த ராஜபக்ச தள்ளப்பட்டுள்ள அதேவேளை சுசில் பிரேமஜயந்த தான் அக்கட்சியில் சேரவே இல்லையென தெரிவிக்கின்றமையும் மஹிந்த ராஜபக்ச சட்டவிரோத பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த வேளையில் உறுப்புரிமை வழங்கும் விழா நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment