தைபா அரபுக் கல்லூரி: புதிய மாணவியர் அனுமதி - sonakar.com

Post Top Ad

Sunday, 23 December 2018

தைபா அரபுக் கல்லூரி: புதிய மாணவியர் அனுமதி


சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் 2019 ஆம் ஆண்டுக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.


இதில் சேர்ந்து கொள்ள விரும்பும் தகைமையுள்ள மாணவிகள் சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள இக்கல்லூரியின் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதிக்கு முன்னதாக அவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இக்கல்லூரியில் மௌலவியா, அல் ஆலிம் மற்றும் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைகளுக்கு மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக, தாயியாக்களாக வெளியேறுகின்றனர்.

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றனர். அத்துடன் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்திருப்பதுடன் 09 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கட்டிடம் ஒன்றில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த இக்கல்லூரி, பொலிவேரியன் நகரில் அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடக் தொகுதியில் தற்போது இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-அஸ்லம் எஸ்.மௌலானா

No comments:

Post a Comment