
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 'கல்குடா சலன்ஞர்' விளையாட்டுக்கழகம் தனது முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதேசத்தின் புத்தி ஜீவிகளையும் ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வினை நடாத்தியது.
கழகத்தின் தலைவர் கே.பி.எஸ்.ஏ.ஜப்பார் தலைமையில் மீறாவோடை மஸ்ஜித் அந் நூர் கேட்போர் கூடத்தில் நேற்று இரவு இடம் பெற்றது இதன் போது கல்குடா முஸ்லீம் பிரதேசத்தின் முதலாவது இளம் விஞ்ஞானி ஏ.எம்.கஸீம்டீன், கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி பிரதேச ஊடகவியலாளர்களான எஸ்.எம்.எம்.முர்ஷித் மற்றும் ஏ.எஸ்.எம்.சதீக் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டதுடன் மீறாவோடை உதுமான் பாலர் பாடசாலை மாணவிகளது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜி. அமீர், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் கழகத்தின் மூத்த உறுப்பினர்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
-அனா
-அனா
No comments:
Post a Comment