இன்றைய தினம் 28 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கான இணக்கப்பாடு நேற்றிரவு எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்ற நிலையில் 45 நிமிடங்களாக (இச்செய்தி எழுதப்படும் வரை) காத்திருப்பு தொடர்கிறது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து எதிர்பார்க்கப்படும் அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ள நிலையில் சட்ட-ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி தன் வசம் வைத்துக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி - பிரதமர் உட்பட 30 பேர் கொண்ட அமைச்சரவையே இம்முறை அமையும் என ஐ.தே.கட்சியினர் தெரிவிக்கின்றமையும் முன்னராக காலை 8.30க்கு அமைச்சரவை நியமனம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment