
அமைச்சரவையை 30 பேருக்குள் சுருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக மலிக் சமரவிக்ரம, மனோ கணேசன் மற்றும் ரிசாத் பதியுதீன் தாம் ஒதுங்கிக் கொள்ள தயாரென தெரிவித்ததாக முன்னராக தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள ஹர்ஷ டிசில்வா, மலிக் சமரவிக்ரமவே முதலில் தான் விலகியிருப்பதாக தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து மேலும் சிலர் அவ்வாறே தெரிவித்த போதிலும் சிறு கட்சிகளுக்குத் தர வேண்டிய பதவிகளை வழங்காதிருக்கும் எண்ணம் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார்.
தானும் ரிசாத் பதியுதீனும் ஒதுங்கத் தயாரென தெரிவித்ததாக மனோ கணேசன் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் ஆதரவாளர்களும் ஏட்டிக்குப் போட்டியாக தமது தலைவர்கள் அவ்வாறு சொன்னதாக கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். எனினும், சிறு கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி கை விடாது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment