2019ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்காட வரவு-செலவுத் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றில் அது சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மங்கள சமரவீரவே நிதியமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் 'சூத்திரம்' அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் உலக சந்தையில் விலை குறைந்திருந்த பொழுதும் மஹிந்த தரப்பு அதனை மக்களுக்கு முழுமையாக வழங்கவில்லையென இடைப்பட்ட 46 நாள் மஹிந்த அரசின் போது மங்கள விமர்சித்திருந்திருந்தார்.
இந்நிலையில், நாளை மங்களவின் பட்ஜட் தாக்கல் செய்யப்படவுள்ளமையும் மஹிந்த ராஜபக்சவும் இடைக்கால பட்ஜட் ஒன்றை தாக்கல் செய்ய முயற்சி செய்திருந்த போதிலும் அது தோல்வியடையும் எனும் அபாயத்தால் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment