புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சுப் பொறுப்புகளுக்கான வர்த்தமானி வெளியாகாத நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குடும்ப சகிதம் வெளிநாடு பயணமாகியுள்ளார்.
ஒரு வார கால விடுமுறை நிமித்தம் ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள அதேவேளை, மேலதிக அமைச்சு நியமனங்கள் மற்றும் வர்த்தமானி வெளியீடு தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி - ஐக்கிய தேசியக் கட்சி இடையிலான முறுகல் நிலை இன்னும் முழுமையாகத் தீரவில்லையென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment