கல்முனையில் ஞாயிறன்று இரத்ததான நிகழ்வு - sonakar.com

Post Top Ad

Thursday, 20 December 2018

கல்முனையில் ஞாயிறன்று இரத்ததான நிகழ்வு


கல்முனையன்ஸ் போரம் ஏற்பாடு செய்யும் வருடாந்த இரத்த தான நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 23ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலை 09 . 00 மணி தொடக்கம் மாலை 04 .00 மணி வரை கல்முனை றோயல் வித்தியாலயத்தில் (கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் ) இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பெண்களுக்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

-எம்.என்.எம்.அப்ராஸ்

No comments:

Post a Comment