
ஜனாதிபதி விரும்பாதவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படப் போவதில்லையென தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச.
பிரதமரின் பட்டியலிலிருந்து ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவர்கள், அவருக்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே மைத்ரி முடிவெடுப்பார் என தெரிவிக்கின்ற அதேவேளை கட்சி தாவியவர்களுக்கு பதவிகள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கிறார்.
எனினும், தாம் பதவிகளை எதிர்பார்த்து கட்சி தாவவில்லையெனவும் அப்படியேயாயினும் கூட ஜனாதிபதிக்கு அவ்வாறு 'தேர்ந்தெடுக்கும்' அதிகாரம் இல்லையெனவும் மனுச நானாயக்கார தெரிவிக்கின்றமையும் 225 பேரும் கையொப்பமிட்டாலும் ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க மாட்டேன் என்ற மைத்ரி அண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment