மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட யாரையும் தான் காப்பாற்ற முனையவில்லையென தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.
முஸ்லிம் இளைஞர்கள் சிலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இவ்விடயத்தில் அதிகமாக பேசி வரும் மரிக்கார் அவர்களை விடுவிக்க முயற்சிப்பதாக சிங்கள சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே மரிக்கார் இவ்வாறு விளக்கமளித்துள்ளமையும் முஸ்லிம்கள் தமது நல்லெண்ணத்தை வெளிக்காட்ட உடைக்கப்பட்ட புத்தர் சிலைகளைத் திருத்திக் கொடுக்க வேண்டும் என அவர் முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment