கொலை, பணம் பறிப்பு விவகாரங்களில் தேடப்பட்டு வந்த கல்தேமுல்ல கயான் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐந்து கொலைச் சம்பவங்களில் குறித்த நபர் தேடப்பட்டு வந்த அதேவேளை அங்குலனே ரொஹா என அறியப்படும் சிறைவசப்படுத்தப்பட்டுள்ள நபரின் சகாவாக இருந்து பல்வேறு பணம் பறிப்பு விவகாரங்களிலும் குறித்த நபர் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இரத்மலானையில் வைத்து கைது இடம்பெற்றுள்ள அதேவேளை கூட்டாட்சி அரச காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகள் வெகுவாக தலைவிரித்தாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment