ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்சவின் பெரமுனவும் எதிர்வரும் தேர்தல்களில் இணைந்தே செயற்படும் எனவும் அதற்குத் தடையாக இருப்பவர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த எதிர்ப்பாளர்கள் அரசுடன் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு ஆதரவளிக்க விரும்புபவர்கள் முதலில் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தாய்க் கட்சியெனவும் அக்கட்சியை பாதுகாக்க வேண்டும் எனவும் துமிந்த திசாநாயக்க அணி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment