கட்சி மட்டத்தில் அமைச்சரவைப் போராட்டம் இடம்பெற்று வருகின்ற போதிலும் தான் ஒரு போதும் மஹிந்த அணியில் இணையப் போவதில்லையென தெரிவிக்கிறார் பாலித ரங்கே பண்டார.
தனக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ரங்கே பண்டார, அவ்வாறு கிடைக்கப்பெறாவிடின் தான் முக்கிய அரசியல் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவே ரங்கே பண்டாரவின் அமைச்சுப் பதவியை தர மறுப்பதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர் எதிர்க்கட்சியில் இணையக்கூடும் என வெளியான தகவலின் பின்னணியிலேயே பாலித இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment