
எதிர்வரும் ஜனவரி 9ம் திகதிக்குப் பின் எந்நேரத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த முடியும் எனவும் ஜனாதிபதி அதற்கான கோரிக்கையை முன் வைத்தால் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய.
ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் பின்னணியில் மைத்ரிபால தமக்கு மக்கள் ஆதரவிருப்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும் எனவம் ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, நிறைவேற்ற அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்கான பிரேரணையும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது வாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment