இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 92 மற்றும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும் டீசலின் விலை 5 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி எரிபொருள் விலையைக் குறைத்த போதிலும் அதனை இன்னும் குறைத்திருக்கலாம் என மங்கள சமரவீர அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment