ஜனாதிபதி - பிரதமர் உட்பட 30 பேர் கொண்ட அமைச்சு நியமனம் பெற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டோருக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
அவ்வாற பக்கம் தாவியவர்களுக்கு பதவி வழங்க அனுமதிக்கப்போவதில்லையென மைத்ரி முன்னரே தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் நியமனம் போன்று இன்றைய அமைச்சரவை நியமனமும் ஜனாதிபதியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் பூட்டிய அறையில் பொது ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது.
அத்துடன், வழமைக்கு மாறாக அமைச்சர்கள் தனித்தனியாக ஜனாதிபதியின் அறைக்கு அழைக்கப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை எஞ்சியிருக்கும் தனது பதவிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதில் மைத்ரி மும்முரமாகக் காணப்படுகிறார்.
இதேவேளை, பிரதியமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளாவது கட்சி தாவியவர்களுக்கு வழங்கப்படுமா எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment