அமைச்சரவை நியமனத்தையடுத்து பெரும்பாலான அமைச்சர்கள் தமது கடமைகளை உடனடியாக பொறுப்பேற்றுள்ளனர்.
பலர் ஒக்டோபர் 26க்கு முன் வகித்த பதவிகளையே பெற்றுள்ள நிலையில் தமது அமைச்சுக்கு விரைந்து கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர். தனித்தனியாக அழைத்து அமைச்சுப் பொறுப்புக்கான நியமன சான்றிதழை ஜனாதிபதி வழங்கியிருந்த நிலையில் ஒரு சிலர் அவசர அவசரமாக அமைச்சு அலுவலகத்துக்கு விரைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில், நாளைய தினம் மஹிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பும் பிரதியமைச்சர்கள் நியமனம் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment