இவ்வருடத்துக்கான க.பொ.த உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் விஞ்ஞான மற்றும் பொறியற் துறைகளில் முஸ்லிம் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதோடு மாவட்டங்களில் முதலிடங்களையும் பெற்றுள்ளனர்.
இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், மாத்தளை மாவட்டத்தில் விஞ்ஞானத்துறையில் முதலிடத்தைப் பெற்றுள்ள முஹம்மத் ரிஸ்மி ஹகீம் (மாத்தளை சாஹிரா), அகில இலங்கை ரீதியிலும் மூன்றாவதுட இடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக, உயிரியல் விஞ்ஞான பிரிவுகளிலும் முறையே ஹனீபா முஹம்மத் பர்ஹாத் (மட். புனித மிக்கேல்) மற்றும் பாத்திமா சுக்ரா ஹிதாயத்துல்லா (ஏறாவூர் அலிகார்) ஆகியோர் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைத்துக்கொள்ளப்படும்.
இணையத்தில் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட: https://www.doenets.lk/exam/
No comments:
Post a Comment