மாவனல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் பிரதேசத்தின் முஸ்லிம் இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறான சம்பவங்களைத் தாம் கண்டிப்பதாகவும் சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு பௌத்த மற்றும் ஏனைய சமய தலைமைகளுடன் ஒத்துழைக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment