முஸ்லிம்களின் எதிரியாக தன்னை சித்தரித்து பாரிய இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஞானசார, நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை கடந்த 22ம் திகதி முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று சந்தித்திருந்தது.
இதன் பின்னணியில் அன்றைய விஜயத்தில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி பிரதிநிதிகள் சோனகர்.கொம் ஏற்பாடு செய்திருந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேயர் கேள்விகளுக்கும் விடையளித்து விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு சிலரினால் தூண்டப்பட்டு, சமூக வலைத்தளங்கள் ஊடான தனி நபர் தாக்குதல்கள் தொடரும் பின்னணியில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில் அஷ்ஷெய்க் பாசில் பாரூக் இது பற்றிய விளக்கமொன்றை வழங்கியுள்ளார்.
அதற்கான காணொளி:
No comments:
Post a Comment