அமைச்சர் பதவி மற்றும் ரூ 50 கோடி ரொக்கத்தையும் தட்டிக்கழித்து தான் பாரிய தியாகம் செய்ததன் மூலமே நாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாலித ரங்கே பண்டார.
அஸ்கிரிய சென்று அங்கு மகாநாயக்கரை சந்தித்து உரையாடிய நிலையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தம்மை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டிருந்த விபரத்தை ஒலிப்பதிவு செய்து அதனை வெளியிட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனையையும் பாரிய லஞ்சப் பணப் பரிமாற்றத்தையும் தடுத்து நிறுத்தியதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ள அதேவேளை அவருக்கு கபினட் அந்தஸ்த்தை வழங்க மைத்ரி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment