ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நால்வர் உட்பட 35 பேரின் பெயர்களடங்கிய அமைச்சரவை பட்டியல் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன, சொய்சா மற்றும் பௌசி ஆகியோரின் பெயர்களுடன் இப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சு.கட்சியிலிருந்து பக்கம் தாவியவர்களுக்கு தாம் அமைச்சுப் பதவி வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்ததாக நேற்றைய தினம் தயாசிறி தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அமைச்சரவையை 30க்குள் மட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிக்கு ஆதரவளிக்குமுகமாக தமக்கு அமைச்சுப் பதவி வேண்டாம் என்று சொன்னதாகக் கூறும் சிறு கட்சிகளின் தலைவர்களும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment