கடந்த மூன்று மாதங்களுக்குள் அக்குறணை நகரம் நான்காவது தடவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நேற்றிரவு (22) பெய்த மழையினால் கண்டி - யாழ்ப்பாணம் (ஏ9) வீதியில் மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதுடன் நூற்றுக்கு அதிகமான வர்த்தக நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகின.
அக்குறணை நகர் ஊடாக ஓடும் பிரதான ஆறுகள் இரண்டில் நீர்பெருக்கு ஏற்பட்டதால் நகரின் பிரதான வீதியும் துனுவிலை வீதியும் நீரிழ் மூழ்கியுள்ளமையும் இதுவே வழமையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment