உலகின் மிகப் பெரிய பயணிகள் விமான வகையான எயார்பஸ் ஏ-380 எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் உட்பட பல நாடுகளினால் பயன்படுத்தப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையம் புனரமைக்கப்பட்ட பின்னர் உத்தியோகபூர்வ ரீதியாக கண்காட்சி நிமித்தம் எமிரேட்சின் ஏ-380 தரையிறங்கியிருந்ததையடுத்து அதற்கடுத்ததாக இன்று இரண்டாவது தடவை அவசர தேவையினால் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமான பணியாளர் ஒருவரின் சுகயீனம் காரணமாகவே இன்று காலை இவ்வாறு ஏ-380 கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளமையும் சுமார் இரு மணி நேரத்தில் மீண்டும் புறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment