தேசிய அரசாங்கம் ஒன்று அமையாத பட்சத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைத் தவிர்த்து 30 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக மேற்குறித்த இருவர் உட்பட 30 பேரே நியமிக்கப்படலாம் என்றே நம்பப்படுகின்ற நிலையில் அண்மையில் ஜனாதிபதி தவிர்த்து 29 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கட்சி மாறியவர்கள், தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து வந்தவர்கள் என அனைவருக்கும் பதவி வழங்கும் நிர்ப்பந்தத்தில் கபினட் அந்தஸ்த்து இல்லாத அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் மேலும் பிரதியமைச்சர்களும் ஏலவே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment