2019 ம் ஆண்டு தேர்தல்களுக்கான வருடமாதலால் தமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்குத் தயாராகி வருவதாக தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.
புதிய அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனங்கள் இடம்பெற்று வருவதாகவும் பெரும்பாலும் கூட்டணியொன்று அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிரித்துள்ள மஹிந்த ராஜபக்ச, தனது கட்சியான பெரமுனவை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி சேர்க்கவுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக கடந்த காலங்களில் இயங்கிய மஹிந்தவின் சகாக்களான விமல் வீரவன்ச, தினேஸ் குணர்வதன, வாசுதேவ நானாயக்கார போன்றோரும் அதனூடாகவே மீண்டும் சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை பங்குபோடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்குது.
No comments:
Post a Comment