வடபுல வெள்ளத்தால் 18,500 குடும்பங்களுக்கு பாதிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 24 December 2018

வடபுல வெள்ளத்தால் 18,500 குடும்பங்களுக்கு பாதிப்பு


வடபுலத்தில் நிலவி வரும் மோசமான காலநிலையால் 18,500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.



வடக்கு - கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றும் கனமழை எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

224 வீடுகள் சிறியளவு சேதப்பட்டுள்ள அதேவேளை 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளதோடு இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment