அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயப்பெறுமதி இன்று ரூ 184.07 ஐத் தொட்டுள்ளது.
மத்திய வங்கியின் இன்றைய நாணய மதிப்பீட்டின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 184.07 ரூபா எனவும் கொள்வனவு விலை 180.10 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் மதிப்பு உயர்ந்து வருவதன் காரணத்தால் உலகின் பல நாடுகளின் நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்ற அதேவேளை இலங்கையில் அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியிருந்த அதேவேளை 24 மணி நேரத்துக்குள் பொருளாதாரத்தை சீர் செய்யப் போவதாக தெரிவித்து மஹிந்த ராஜபக்சவும் 50 நாட்கள் முயற்சி செய்து பார்த்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
இந்நிலையில் இலங்கை நாணய பெறுமதி ஒக்டோபரிலிருந்து 5.2 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை நாணய பெறுமதி ஒக்டோபரிலிருந்து 5.2 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment