11 மாதத்தில் மைத்ரி முடிவெடுக்க வேண்டும்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Thursday, 20 December 2018

11 மாதத்தில் மைத்ரி முடிவெடுக்க வேண்டும்: தேசப்பிரிய


எதிர்வரும் வருடம் செப்டம்பர் 9ம் திகதிக்கும் நவம்பர் 9ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டும் என கருத்து வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


மைத்ரி அதனையும் தாண்டி நீடிக்க விரும்பினால் ஜனவரி 9ம் திகதியை அண்மித்து தேர்தலை நடாத்தலாம் எனவும் நல்லாட்சி கோட்பாட்டின் படி சரியான தருணத்தில் தேர்தல் நடாத்தப்படுவதே நியாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாகவே இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் உள்ளூராட்சித் தேர்தல் பாரிய இழுபறிக்குள்ளாகியிருந்த அதேவேளை மாகாண சபை தேர்தல்களும் இன்னும் திட்டமிடப்படாத நிலை தொடர்கின்றமையும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாகக் கையில் எடுத்துள்ள மைத்ரி அடுத்தடுத்து அதிரடி நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment