UK: இலங்கையர்களுக்கான Crawley Premier League அறிமுக விழா - sonakar.com

Post Top Ad

Friday, 5 October 2018

UK: இலங்கையர்களுக்கான Crawley Premier League அறிமுக விழா



UK Crawley பகுதியில் முதற்தடவையாக இலங்கையர்களுக்கான கிரிக்கெட் தொடர் Crawley Premier League 2019 அறிமுக விழா நேற்று வியாழக்கிழமை (04/10/2018) மிகக் கோலாகலமாக Bewbush Conference மண்டபத்தில் நடைபெற்றது. 

இவ்வைபவத்தில் நான்கு அணிகள் உள்ளூர் பெயர்களில் அறிவிக்கப்பட்டு நான்கு உரிமையாளர்கள் துண்டுக்குலுக்கள் மூலம் தத்தமது அணிகளை தேர்ந்தெடுத்தனர். 



இதன் போது, Southgate Super Kings (SSK) அணிக்கு உரிமையாளராக Alfaazy Jaufardeen, Northgate Worrier அணிக்கு உரிமையாளராக Moufeed Mohammed, Tilgate Titan அணிக்கு உரிமையாளராக Arafath Cader மற்றும் Royal Challengers Bewbush அணிக்கு உரிமையாளராக Rifas Rasheed ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். 

எதிர்வரும் 2019 ஏப்ரல் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இத்தொடருக்கு வீரர்களுக்கான ஏலம் நவம்பர் மாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-Shafwan saheeds  

No comments:

Post a Comment