மாத்தறையிலிருந்து அம்பாறை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் தெஹியத்தகண்டியவிலிருந்து காலி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்தும் ஹம்பாந்தோட்ட, லுனுகம்வெஹர பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
இதன் போது சுமார் 50 பயணிகள் காயமுற்று லுனுகம்வெஹர, ஹம்பாந்தோட்டை மற்றும் தெபரவேவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment