எஸ்.பி. திசாநாயக்கவின் வீட்டில் வைத்தே மஹிந்த - மைத்ரி சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மஹிந்த தனது வீட்டுக்கு இராப்போசனம் ஒன்றுக்Nகு வந்ததாகவும் முக்கிய பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் விளக்கம் வெளியிட்டுள்ளார் எஸ்.பி.
கூட்டணி அரசைக் கவிழ்த்து இடைக்கால அரசொன்றை நிறுவுவதற்கான முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மஹிந்த - மைத்ரி சந்திப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டை முறித்துக் கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment