தன்னைக் கொலை செய்யும் திட்டத்தின் பின்னணியில் இந்திய உளவு நிறுவனமான RAW இருப்பதாக தெரிவிக்கின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, எனினும் தனக்கு மோடி மீது நம்பிக்கையிருப்பதாகவும் அவர் அதற்கு இணங்கியிருக்க மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் அமைச்சரவையில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள மைத்ரி, சிலவேளைகளில் நாட்டின் தலைவருக்குத் தெரியாமலேயே உளவு நிறுவனங்கள் இவ்வாறு கொலைகளைச் செய்வதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகள் மந்தகதியில் நடப்பது தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் மைத்ரி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment