இலங்கை நாணய பெறுமதி வீழ்ச்சியினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகன அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு வருட தடையை நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்திருந்த நிலையில் ஏலவே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கான வாகனங்களை இறக்குமதி செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இத்தகவலை வெளியிட்டிருந்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, முதலாவது நாடாளுமன்ற தவணையின் போதே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும் பெரும்பாலானோர் உடனடியாக தமக்கான வாகனங்களை இறக்குமதி செய்து விட்டதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பொது சேவை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 8000 அனுமதிப் பத்திரங்கள் இன்னும் உபயோகப்படுத்தப்படவில்லையெனவும் அமைச்சுக்களுக்கான வாகன இறக்குமதி இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment