கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி அரசின் 2019க்கான வரவு செலவுத் திட்டத்தை முறியடித்து அரசைக் கவிழ்க்கப் போவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் தோல்வி கண்டு அவற்றைக் கைவிட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.
இதேவேளை, தமது பினாமி அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தாம் ஏற்கத் தயார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்றமையும் தனது புதல்வருக்கு 35 வயது நிரம்பாததால் தனது குடும்பத்தில் வேறு ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக இந்தியாவில் வைத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment